Thursday, September 1, 2022

ஆன்லைனில் சுலபமாக வருமானம் ஈட்ட நம்பகமான செயலி - மீஷோ!


மீஷோ செயலி ஓர் அறிமுகம் :




  • டெல்லி   IIT பட்டதாரிகளான விதிட் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பார்ன்வல் இணைந்து 2015 ஆம் ஆண்டு Meesho ஆன்லைன் ஷாப்பிங்செயலியை துவக்கினர்.
  •  அறிமுகம் செய்யப்பட்ட குறுகிய காலத்திலேயே இந்திய ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது மீஷோ ஷாப்பிங்.
  •  இந்தியாவில் ஏற்கெனவே அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட மாபெரும் ஷாப்பிங் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், சந்தையில் நுழைந்த சிறிது காலத்திலேயே வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது மீஷோ ஷாப்பிங்.

ஏற்கெனவே இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் நிறைய இருந்தாலும் மீஷோ நிறுவனம் அதிவிரைவில் வளர்ச்சியடைந்ததற்கு என்ன காரணம்?

 


 

  • கிராமப்புற மக்கள் மற்றும் நகரங்களின் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மக்களையும் ஆன்லைன் ஷாப்பின் சேவைகள் சென்றடையும் நோக்கத்தில் மீஷோ சேவை வழங்கி வருவதாக அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரிகள்  கூறுகிறார்கள் 

  • பழைய  ஸ்மார்ட்போன்களில்கூட மீஷோ ஆப் சிறப்பாக இயங்குவதாக சஞ்சீவ் பர்ன்வல் கூறுகிறார். கடந்த ஆண்டில் மட்டும் மீஷோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரு மடங்கு உயர்ந்து 5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
  • பேஸ்புக் நிறுவனரான மார்க் சூக்கர்பெர்க், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்


ரீசெல்லிங் மூலம் பயனாளர்கள் வருமானம் ஈட்டும் வாய்ப்பு  :


  • ரீசெல்லிங் எனப்படும் பொருட்களை மறுவிற்பனை செய்வதற்கு ஏற்ற தளமாக உருவாக்கப்பட்ட இந்த செயலியில் யார் வேண்டுமானாலும் பிராண்டுகளின் பொருட்களை ரீ செல்லிங் செய்யலாம்

பயனாளர்களின் நம்பிக்கைக்குரிய வருமானம் ஈட்டும் செயலி :




  • பயனாளர்கள்   லாபம் எவ்வளவு வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் அம்சமும் இதில் உள்ளது
  • மிக குறுகிய நேரத்தில பெரிய லாபத்துக்கு பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் இந்த செயலியில் அதிகம்
  • நம்பிக்கைக்குரிய வருமானம் ஈட்டும் தளமாக இது இருப்பதால் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்

Meesho செயலி :

  • இந்த புராசஸ் முடிந்தபிறகு செல்போனில் இருக்கும் மிஷோ செயலியின் ஐகானை கிளிக் செய்யுங்கள். அதனை கிளிக் செய்தவுடன் நீங்கள் மீஷோ செயலியின் முகப்பு பக்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள் 
  • இதன் பின்னர் ரெஜிஸ்டர் OPTION ஐ கிளிக் செய்து  உங்கள் மொபைல் என்னை கொண்டு ஒரு அடையாள குறியீட்டினை (USER ID ) உருவாக்கி கொள்ள வேண்டும் 

புரொடக்டை தேர்ந்தெடுத்தல் :

நீங்கள் எந்த பொருளை விற்பனை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அதனை Search for the product என்ற ஆப்சனில் தேட வேண்டும். அதில் நிறைய வகையான கலெக்ஷன்கள் இருக்கும். உங்களுக்கு விருப்பமான புரொடக்டை விற்பனைக்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொருட்களை வாட்ஸ் அப்பில் பகிர்தல் :

  • நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் புரோடக்டை தேர்தெடுத்துவிட்டால், அதன்பின்னர் ஷேர் ஆன் வாட்ஸ் அப் (Share on WhatsApp) -ஐ கிளிக் செய்து, புரோடக்டின் முழு தகவல்களை பதிவு செய்து, விற்பனையை தொடங்கலாம். 
  • வாட்ஸ் அப் மட்டுமல்லாமல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களிலும் நீங்கள் விற்பனை செய்யும் புரொடக்டுகளை விளம்பரப்படுத்தலாம். 


முகவரி  விவரம் :

contact details பக்கத்தில் உங்களை தொடர்பு கொள்வதற்கான தகவல்களை பதிவிட்டுக் கொள்ள வேண்டும். Add the product to Cart என்ற வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு பிடித்த பொருட்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

பொருள்களின் அளவு மற்றும் தரம்   :

பொருள் குவாலிட்டி பகுதியில் நீங்கள் தேர்தெடுதிருக்கும் பொருளின் அளவு, தரம் ஆகியவற்றை பதிவிட வேண்டும்

Cart-ல் தேர்ந்துடுக்கப்பட்ட  பொருட்கள் :

  • விரும்பும் பொருட்களை Cart ஆப்சனில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
  •   நிறைய பொருட்கள் இருக்கும்போது Find the product in Cart ஆப்சனில் எளிதாக தேடிக் கண்டுபிடிக்கலாம்.


பணம்  செலுத்தும்  முறைகள்  : (PAYMENT  METHODS )

தேர்ந்தெடுக்கப்பட்ட  பொருட்களை விற்பனை செய்யும் பயனரே, வாடிக்கையாளர்கள் பேமெண்ட் வசதியை தேர்தெடுத்துக் கொள்ளலாம். 

  • நேரடியாக பணம் செலுத்துதல் ( Cash on delivery). 

கேஷ்-ஆன் டெலிவரி கொடுத்தால் பொருட்கள் டெலிவரி செய்த பிறகே உங்களுக்கான தொகை கிடைக்கும்.

  • ஆன்லைன் பேமெண்டு வசதிகள் . 
  1. கிரெடிட் கார்டு 
  2. டெபிட் கார்டு 
  3. நெட்பாங்கிங் 
  4. யூ பி ஐ 
  5. பேமென்ட் செயலிகள் 

ஆர்டர் விவரம்

 ஆர்டர் செய்தவரின் முகவரி, பொருட்களின் தகவல்கள் மற்றும் பொருட்களை அனுப்புவரின் விவரம் ஆகியவற்றை தெளிவாக பதிவிட வேண்டும். 

முகவரி, தொலைபேசி எண்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

மார்ஜின் தொகை :

பயனாளர்  விற்பனை செய்ய விரும்பும் பொருளுக்கு கிடைக்க வேண்டிய லாப தொகையை அவரே முடிவு செய்து கொள்ள முடியும். 

பயனர்  தீர்மானிக்கும் லாபத்தின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு பொருளின் விலை காண்பிக்கும்.

தகவல்களை  சமர்பித்தல் :

  • ஆர்டர் உங்களுக்கு கிடைத்துவிட்டால், சப்ளையர் மற்றும் வாடிக்கையாளரின்  முகவரி மற்றும் தொலைபேசி விவரங்களை முழுமையாக இருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். 
  • நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த பின்னர் ஆர்டர் கொடுக்கலாம். 
  • உரிய நபருக்கு பொருள் சேரும். உங்களுக்கும் பணம் கிடைக்கும்.








No comments:

Post a Comment